20 ஜூலை, 2012
தொன்மொழிக் கவிதை
உன்னிடத்தில் நான் கொண்ட உண்மை
அவ்வப்போது உன் மீது கொப்பளிக்கும் காதல்
நம் ஊடே அடிக்கடி முளைக்கும் ஊடல்
அதன் முடிவில் நாம் கொண்ட புரிதல்
உன் மீது நான் கொள்ளும் கோபம்
அதன் மூலமாய் நான் கொண்ட அக்கறை
உன்னிடத்தில் நான் வீசும் சொற்கள்
அதன் பயனாய் நீ கண்ட வலிகள்
ஒவ்வொரு முறையும் நான் செய்யும் தவறுகள்...
உன்னைப் புரிய முயலாமல் நான் செய்யும் தவறுகள்
ஒவ்வொரு முறையும் நான் கொள்ளும்
இந்தப் புரிந்துணர்வை என்னால்
விளக்க முடியவில்லை உன்னிடத்தில்...
நீ கொடுக்கும் கால அவகாசத்தில்
அப்பொழுதெல்லாம் பதறிப்போய்
எனை விளக்கும் குறு சொல்லைப்
பன் மொழியில் தேடும் நான்
ஒவ்வொரு முறையும் மிக
அழுத்தமாய் சொல்லி முடிக்கிறேன்
முத்தம் எனும் தொன்மொழியில்...
முத்தம் எனும் தொன்மொழியில்...
அதைப் பிடித்தும் பிடிக்காத நீயோ
தொன்மொழி புரிந்தும் புரியாதவளாய்
Labels:
கவிதைகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அருமை... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்கு